தேங்காய்_அல்வா
#தேவையானபொருட்கள் ……
- பச்சரிசி – 250 கிராம்
- ஜவ்வரிசி – 100 கிராம்
- கருப்பட்டி – 500 கிராம்
- பாசிப்பருப்பு – 100 கிராம்
- நெய் – 200 கிராம்
- தேங்காய் – 3
- முந்திரி – 10
- ஏலக்காய் பொடி, தண்ணீர் – தேவையான அளவு.
செய்முறை……
பச்சரிசியை, தண்ணீரில் ஊற வைத்து, வடிகட்டி, நிழலில் உலர்த்தி, மாவாக அரைக்கவும்.
தேங்காயை துருவி பால் எடுக்கவும்.
ஜவ்வரிசியை, மூன்று மணி நேரம் ஊற வைத்து, வடிகட்டவும்.
தேங்காய் பாலில், அரிசி மாவு, ஜவ்வரிசியை கலந்து வேகவைக்கவும். தீயை மிதமாக எரியவிட்டு கிளறவும். இந்த கலவையுடன், கருப்பட்டி துாளையும், நெய்யையும் சிறிது சிறிதாக சேர்க்கவும்.
நன்றாக வெந்து சுருண்டதும், நெய் தடவிய தட்டில் ஊற்றவும். அதன்மீது வறுத்த பாசிப்பருப்பு, முந்திரி, ஏலப்பொடியை துாவி சமப்படுத்தவும். ஆறிய பின், துண்டுகளாக்கவும். சத்துக்கள் நிறைந்த, ‘தேங்காய் அல்வா’ தயார்.
சிறுவர்,சிறுமியர் விரும்பி சாப்பிடுவர்.