அவல் பிரியாணி Seimurai

44

தினமும் ஒரு சமையல்

குழந்தைகள் விரும்பும் அவல் பிரியாணி

காலையில் எழுந்தவுடன் இன்று காலை டிபன் என்ன சமைக்க போகிறோமோ என்று கவலைப்படாமல், எளிதில் சமைக்கக்கூடியதும்.

*தேவையானப் பொருட்கள் :*

அவல் – 4 கப்

பெரிய வெங்காயம் – 3 (நறுக்கியது)

கேரட் – 1 கப் (நறுக்கியது)

பீன்ஸ் – 1 கப் (நறுக்கியது)

தக்காளி – 4 (நறுக்கியது)

இஞ்சி விழுது – 1 ஸ்பூன்

பச்சை மிளகாய் – 4 (நறுக்கியது)

இலவங்கம் – 5

ஏலக்காய் – 4

பட்டை – 1 துண்டு

சோம்பு – 2 ஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லித்தழை – சிறிதளவு

தண்ணீர் – தேவையான அளவு

*செய்முறை :*

👉 முதலில் நன்றாக அவலைச் சுத்தம் செய்து, தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊறவைக்க வேண்டும். பின் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் சோம்பு, பட்டை, இலவங்கம், ஏலக்காய் போட்டுத் தாளிக்க வேண்டும்.

👉 பின்னர் அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், இஞ்சி விழுது, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு காய்கறிகள், தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக வதக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிடலாம்.

👉 கடைசியாக காய்கறிகள் வெந்ததும், அதில் அவலைப் போட்டுக் கிளற வேண்டும். அவல் உதிரியாக வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால்,

சுவையான அவல் பிரியாணி தயார்.

🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here